ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று(22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்க உடன்படிக்கையில் உள்ள பாதகமான விளைவுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க எதிர்பார்த்துள்ளதாக குறித்த சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொழம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.