அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம் நலன்தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் , பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்தார்.
மேலும் , அவுஸ்ரேலிய பிரதமர் இன்று(02) நண்பகல் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.