ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாது?

பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்படாமை காரணமாக விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது.

இதுவரையில் இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்படா விட்டால் பல விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.