(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 48 முறைப்பாடுகள் பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்றுடன் நிறைவு பெற்றது.