ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சஜின் விசாரணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் மனைவி 6.5 மில்லியன் பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவினால் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி ,வன்முறைகள் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகப்படுத்தியதன் காரணமாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் புலனாய்வாளர்களால் 2 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாஸ் குணவர்தனவின் பெயரில் கொஸ்மோஸ் டெக்னொலஜிஸ் நிறுவனத்தில் இந்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு பொது மக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாகவே ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திவிநெகும நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.