ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்…

ஜப்பானிய பிரதமரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜனாதிபதி ஜப்பானில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜப்பானிய பிரதமர், ஜப்பானின் மன்னர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நாளை(13) பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது தொடர்பான பரஸ்பர விடயங்கள் குறித்து இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.