சிங்கப்பூருக்கான நான்கு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியான் லூங்குடான் இன்று(25) மாலை இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.