ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியிலிருந்து இராஜினாமா

ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியில் இருந்து தான் விலகியுள்ளதாக  ஒஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தான் தற்போது தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவினுள் நிர்வாக மோதல்கள், தொடர்பு கொள்ளவதில் பலவீனங்கள் மற்றும் உள்துறை அரசியல் மயமாக்கப்படுகின்றமையினால் அங்கு விளைவுத்திறனில் சரிவு ஏற்பட்டுள்ளதனால், தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்துகொள்வதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.