ஜனாதிபதி கொலைச் சதியில் பொலிஸ்மா அதிபரும் தொடர்பு.. நாமல் சாட்சியம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் தொடர்புபட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.

குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமார அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.