ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்

பிர­பல ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி இரத்­தி­ன­வ­டிவேல் சுரேந்­திரன் நேற்று திங்­கட்­கி­ழமை அதி­கா­லையில் கால­மானார். கொழும்பு விவே­கா­னந்­த­ ச­பையின் தலை­வ­ரா­கவும், அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபை உறுப்­பி­ன­ரா­கவும் விளங்­கி­ய ­சு­ரேந்­திரன், சட்டத் தொழிலில் தனக்­கென ஒரு சிறப்­பான இடத்­தைப்­பெற்ற பெரு­மைக்­கு­ரி­யவர். அமரர் ஆறு­முகம் இரத்­தி­ன­வ­டிவேல் தம்­ப­தி­களின் மூத்த மகனும், அமரர் சட்­டத்­த­ரணி வேலுப்­பிள்ளை முரு­கேசு தம்­ப­தி­களின் மரு­ம­க­னு­மாவார்.

திரு­மதி ரேணு­கா­தே­வியின் (பாலர் பாட­சாலை அதிபர்) அன்புக் கண­வரும், பிர­சாந்தன், பவித்­திரா, காலஞ்­சென்ற பிர­தர்­சனி ஆகி­யோரின் பாச­மிகு தந்­தை­யு­மாவார்.

பிரசெல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சர்­வ­தேச சட்­டங்­களில் முது­மா­ணிப்­பட்டம் பெற்ற சுரேந்­திரன், இலண்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உயர் சட்ட ஆராய்ச்­சிப்­பீ­டத்தில் ஆராய்ச்சி செய்­தி­ருப்­ப ­துடன், ஐக்­கிய நாடுகள் சட்­ட­பீ­டத்தில் சர்­வ­தேச வர்த்­தக சட்­டத்தில் பயிற்­சியும் பெற்­றி­ருக்­கிறார்.

2004 இல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யாக நிய­மிக்­கப்­பட்டார். இலங்கைச் சட்டக் கல்­லூ­ரியில் பரீட்­ச­க­ரா­கவும் இருந்த இவர் வெளி­நா­டு­க­ளிலும், இலங்­கை­யிலும் நடந்த பல சட்ட மாநா­டு­க­ளிலும் ஆராய்ச்சிக் கட்­டு­ரை­களும் விரி­வு­ரை­களும் நிகழ்த்­தி­யுள்ளார். காணி மோசடி மற்றும் தேச­வ­ழமைச் சட்ட சீர்­தி­ருத்­தக்­குழு அங்­கத்­த­வ­ரா­கவும், இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சபைச் சட்­டக்­கு­ழுவின் தலை­வ­ரா­கவும் இருந்தார்.

யாழ்.மத்­திய கல்­லூ­ரியின் புகழ்­பூத்த பழைய மாண­வ­ரான இவர், அக்­கல்­லூ­ரியின் மாணவ தலை­வ­ராக இருந்­த­துடன் வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்­கி­டையே நடந்த ஆங்­கி­ல­தினப் போட்­டி ­யிலும் முதற்­ப­ரிசு பெற்­றவர்.

பூத­வுடல் அன்­னாரின் கொள்­ளுப்­பிட்டி கார்வில்ஸ் பிளேஸ் இல.12 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டு, நாளை புதன்கிழமை மதியம் 12 மணிக்கு கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 12.30 மணியளவில் தகனக்கிரியைகள் இடம்பெறும்.