ஜனாதிபதி சீன விஜயத்தினை இரத்து செய்தார்…

சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை எதிர்வரும் வெள்ளிக் கிழமை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவிருந்த நிலையில் திடீரென குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசினைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் சர்ச்சை நிலையினை கருத்திற் கொண்டே, ஜனாதிபதி குறித்த விஜயத்தினை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.