ஜனாதிபதி செயலகம் சென்று ஜேவிபி கோரிக்கை..

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக விசாரணை அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை பெற்றுத் தருமாறு ஜேவிபி கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(02) கடிதம் ஒன்றினை கையளித்து குறித்த கோரிக்கையினை மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவால் தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் கீழ் குறித்த கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#reeshmaa…