இன்றைய(21) அமைச்சரவை சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ள இன்றைய அமைச்சரவை சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலைக் குறித்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற தெரிவுக் குழு பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் இன்று(21) கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.