ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிர்வாகக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் கூடியுள்ளது.
குறித்த இந்நிகழ்வில் போது தற்போதைய அரசியல் நிலை மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய அரசியல் கட்சிகளை இணைப்பதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை விரிவடையச் செய்யலாம் எனவும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.