UPDATE – பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..

‘வன்முறை மற்றும் தீவிரவாதம் என்பவற்றைத் தடுக்கும் சர்வதேச போக்கு’ எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று(28) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது..

குறித்த இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்..

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் 31 நாடுகளைச் சேர்ந்த 52 பாதுகாப்பு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)