ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று(10) அவசரமாக கூட்டவுள்ளதாக கட்சியின் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் முக்கிய விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும், ஜனாதிபதியின் தீர்மானத்தை இன்றிரவு(10) அல்லது நாளை(11) ஜனாதிபதி அறிவிப்பார் என ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவும் கூறியிருக்கும் நிலையில், இன்று அவசர கூட்டம் நடைபெறுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(rizmira)