ஜனாதிபதி மைத்திரிபால மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று(27) தென்கொரியா செல்லவுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி முன் ஜெயினின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஜனாதிபதி மைத்திரி தென் கொரியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளினதும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் பல உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.