(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவினர் நேற்றைய தினம்(17) ஜனாதிபதியை சந்தித்த போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கத்சியினர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.