ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று இதனை அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.