(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை கட்டமைக்காமல் முறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால், அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) கூடிய எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் தாம் நினைக்கும் நேரங்களில், தாம் நினைக்கும் விதத்தில் தமது காலக்கெடுவுக்கு ஏற்ற வகையில் தேர்தல் வரைபடத்தை உருவாக்குவது ஜனநாயகச் செயல் அல்ல என்றார்.
ஜனாதிபதியோ அல்லது அவருக்கு ஆதரவானோரின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் வரைபடத்தை தயாரிப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அரசாங்கம் கொண்டுவருவதற்கு தயாராக உள்ள, ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்தும் பிரேரணையை எதிர்கட்சியாக முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.