சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு(25) நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூருக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தில், இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது
ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.