ஜனாதிபதி பாலின ஈர்ப்பு சமூகத்தினை இலக்காகக் கொண்டு கருத்து தெரிவிக்கவில்லை – மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பத்தரமுல்ல பிரதேசத்தில் கலந்து கொண்டு ‘மக்கள் மகிமை’ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எந்த முறையிலும் பாலின ஈர்ப்பு சமூகத்தினை இலக்காகக் கொண்டு கருத்துத் தெரிவிக்கவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தற்போது நிகழும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றும் பொது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு வண்ணாத்து பூச்சிகள் குழுவுடன் பயணிப்பதாக கருத்து வெளியிட்டிருந்தார். அந்த வகையில் வண்ணாத்து பூச்சிகள் என வர்ணிப்பது ஓரினச் சேர்க்கையாளர்களை என சமூக வலையதளங்கள் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தகது.