ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாமென அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவு இட்டிருந்ததாகவும், குறித்த உத்தரவினை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஆட்சியாளர்கள் பின்வாங்குவதாகவும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் முன்னாள் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தமாரா குலநாயகம் ‘எழிய’ எனும் அமைப்பினால் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இன்று(13) தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கையிலுள்ள அமெரிக்கா தூதுவர் ஒரு ராஜாவினைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனைகளை வழங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படுவது உலகம் பூராகவும் உள்ள நாடுகளை இரண்டாக பிரிப்பதே ஆகும். இலங்கையிலும் அமெரிக்க தூதுவர் முனைவது குறித்த முயற்சிக்கே, அதற்கு நல்லாட்சி அரசின் தலைவர்களும் துணை செல்கின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
#rishma