ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன நேற்று(17) தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடியிருந்தார்.
பொதுவாக ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகளின் பிள்ளைகள் நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று பிறந்த நாள் கொண்டாடுவதனையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி மைத்திரியின் மகன் அனைவருக்கும் ஒரு உதாரணத்தை கற்பிக்கும் வகையில் தனது பிறந்தநாளை மீரிகமவில் அமைந்துள்ள மனநலம் குன்றிய குழந்தை பராமரிப்பு மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் கொண்டாடியுள்ளார்.
அங்குள்ள பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட அனைத்து பொருட்களும் தஹாம் சிறிசேனவினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













#reeshma