ஜனாதிபதி பெயரிட்ட குழுவில் இருந்து மஹிந்த சமரசிங்க விலகல்..

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்த ஆண்டுக்கான அமர்வில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பெயரிடப்பட்ட குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க விலகியுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வில் பங்கேற்க மூவர் அடங்கிய குழுவினை அனுப்ப ஜனாதிபதி கடந்த வாரம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.