(FASTGOSSIP | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெசாக் தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றிருந்த போது,
ஜனாதிபதிக்கும் ஞானசார தேரரும் இடையில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.