ஜனாதிபதி பொய்யுரைப்பதாக ரொய்ட்டர் உலகிற்கே எதிரொலி…

2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த இந்நாள் அரசு, மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய வங்கியின் புள்ளி விவரங்களை ஆராயாது பேசுவதாக 2006 முதல் 2014ம் ஆண்டு வரை பதவி வகித்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ரொய்ட்டர் உலக செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தெரிவிக்கப்பட்டதன் படி, இலங்கையின் கடந்த அரசு 58 பில்லியன் டொலர் கடன் என்பது அப்பாட்டமான பொய் என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான புள்ளி விவரங்கள் மத்திய வங்கியில் உள்ளதாக தெரிவித்த முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர், சரியான ஆய்வுகள் எதுவுமின்றி, ஜனாதிபதியினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த ரொய்ட்டர் செய்தியினை பார்வையிட இங்கே அழுத்தவும்..

#g-reeshma