கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரத்திட்டத்தால் கொழும்பு நகரம் தாழிறங்காதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எனினும் கட்டடங்கள் சிலவற்றிட்கு பாதிப்பு ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அவரது உத்தியோகபூர்வ முகநூல் தளத்திலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த வேலைத்திட்டத்தினால் கொழும்பு நகரம் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்தினை தானும் ஏற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இடம்பெற்ற ஒரு மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டதாக ராவய எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த வீடியோ..
#rishma…