ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வரியின்றி வாகனங்கள் இறக்குமதி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வரியின்றி இரண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வரியின்றி வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரத்தை ஒழுங்குபடுத்தபடவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கு வாழ்நாளில் அவ்வாறான வாகன இரண்டு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்