ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கும் இடையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னிணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் கலந்து கொண்டனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகும் பட்சத்தில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு தயாராகவுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர், அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய முன்னிணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்று மாலை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.