ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் CRT வர்த்தக கண்காட்சி ஆரம்பம்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் CRT வர்த்தக கண்காட்சி இன்று(11) ஆரம்பமாகியது.

பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

குறித்த இந்த கண்காட்சி 3 நாட்களைக் கொண்டதாக நாளாந்தம் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

 

(rizmira)