ஜனாதிபதி மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கு இடையே அவசர சந்திப்பு…

மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று(27) இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதி இல்லத்தில், சந்திக்கவுள்ளார்.

மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குறித்த செய்தியினை உறுதி செய்துள்ளார்.

மத்திய, தெற்கு, சப்ரகமுவ, வயம்ப, ஊவா, வடமேல் மற்றும் வடத்திய மாகாண முதலமைச்சர்களுக்கும் மாகாண அமைச்சர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் மற்றும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

(rizmira)