ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் தான் தொடர்புபட்டதாக தெரிவிக்கும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்றைய(21) பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
அவரது முன்வைப்பில், ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் சரத் பொன்சேகா தொடர்பில்லை. அவ்வாறான முறைப்பாடுகளும் இல்லை. விசாரணைகளில் அம்பலமாகவும் இல்லை என, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் (சி.ஐ.டி) பொலிஸ் மா அதிபரும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, நாமல் குமார என்பவர், தன்மீது போலியான குற்றச்சாட்டை முன்வைத்துகொண்டிருக்கின்றார் என்றார்.