ஜனாதிபதி மற்றும் மஹிந்த இடையே விசேட கலந்துரையாடல்..

நிலவும் அரசியல் நிலையுடன் அரச சேவைகளில் நிலவும் மந்தப் போக்கு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் இன்று(09) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அரச சேவையினை திறன்படச் செய்ய முன்னெடுக்க வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடலில் முக்கிய நோக்காகும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே,ரத்னசிறி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.