ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விலாதிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக ரஷ்ய தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு செல்லவுள்ளார்.
வன்னியின் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்துக்கு பீ.எம்.ரி. யுத்த டாங்கிகளை வழங்கி ரஷ்யா உதவியதாகவும், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இலங்கைக்கு சார்பாக ரஷ்யா குரல் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றதும் சுட்டிக்காட்டத்தக்கது.