எதிர்வரும் சிங்கள புதுவருடத்தின் பின்னர் அமைச்சரவைக் குழுவில் மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(27) வடக்கு கிழக்கு மாகாண சபைகளை விடுத்து ஏனைய 7 மாகாண முதலமைச்சர்களையும் சந்தித்த போதே தெரிவித்துள்ளார்.
மேலும், 2012ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான ஆட்சி காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி குறித்த சந்திப்பில் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலத்துடன் போட்டியிட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.