ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளவுள்ளார்.
செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த விஜயத்தின் போது ஜானதிபதி பல நாட்டுத் தலைவர்களுடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(rizmira)