ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.