(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(14) விசேட உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி, கென்ய ஜனாதிபதியை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியதோடு மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரையை கென்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றாடலை நேசிக்கும் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்களை கென்ய ஜனாதிபதி கௌரவப்படுத்தி கருத்து வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.