ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள முயற்சிப்பதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், 19ஆம் திருத்தச் சட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டு சட்டமாக பிரகடனம் செய்யப்பட்டது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் ஜனவரி மாதம் முதல் ஐந்தாண்டுகளா அல்லது மே மாதம் முதல் ஐந்தாண்டுகளாக என்பது குறித்து ஜனாதிபதி சட்ட விளக்கம் கோர எத்தனிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி இவ்வாறு தனது பதவிக் காலம் குறித்து உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோருவது தற்போதைய காலச் சூழ்நிலைக்கு பொருத்தமற்ற, பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய ஓர் நடவடிக்கையாகும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாக பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.