ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்..

மலேசிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மலேசியாவுக்கு செல்கிறார்.

இலங்கை, மலேசிய நாடுகளுக்கிடையிலான தூதரக தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இடம்பெறும் நிகழ்வு மற்றும் உணவு கண்காட்சி போன்றவற்றில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்கிறார்.

அங்கு செல்லும் அவர், மலேசிய மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.