ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் வைபவம் நேற்று கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது.
இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கியதுடன் கப்பலின் பெயர்ப்பலகையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். அத்துடன் நின்றுவிடாது கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதன் செயற்பாடுகளைப் ஜனாதிபதி பார்வையிட்டார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியாவில் உள்ள கிராண்ட் அல்-ஒமாரி பள்ளிவாசலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்துள்ளன. குறித்த…
சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று இன்று(01) முதல் மூன்று மாதங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள்…