ஜனாதிபதி மைத்திரியை காட்டிக் கொடுத்த மர்ம நபர் சிக்கினார்!

கடந்த சில தினங்களாக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சராக செயற்பட்ட போது மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டதாகவும், அதற்காக அந்த நிறுவனங்களிடம் இலஞ்சம் கோரியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த செய்தி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ள அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவு, அந்த செய்திக்கு காரணமாகியுள்ள மின்னஞ்சல் தொடர்பிலும் வசந்த தஸநாயக்க என்ற நபர் தொடர்பிலும் விரிவாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மின்னஞ்சல் தகவல்கள் இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தவிர வேறு தகவல் அல்லது சாட்சிகள் இதுவரையில் கிடைக்கவில்லை.

அவுஸ்திரேலியாவின் SMEC என்ற இரண்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு முகாமையாளராக செயற்பட்ட வசந்த தஸநாயக்க என்ற நபர் தனது முதல் நிறுவனத்திற்கு 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 03ஆம் திகதி அனுப்பிய முதல் மின்னஞ்சலில், தான் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது இணைப்பு செயலாளரை சந்தித்ததாகவும், அங்கு அமைச்சரினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு உதவ முடியுமா என கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக அனுப்பி வைத்த மின்னஞ்சலில் இணைப்பு செயலாளர் திட்டத்தில் நூற்றுக்கு ஒரு ரூபாய் படி கோரினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய இணையத்தளத்தின் கோரிக்கைக்கு அமைய 27,000 அவுஸ்திரேலிய டொலர் (25 இலட்சம் ரூபா) செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான உரிய சாட்சி அல்லது அது யாரால் பெற்றுக் கொள்ளப்பட்டதென்பதற்கான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

இந்த சம்பவத்திற்கான மின்னஞ்சல் அல்லது வேறு சாட்சிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும் இந்த வசந்த தஸநாயக்க என்ற நபர் 2008ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை அந்த நிறுவனத்தில் செயற்பட்டுள்ளார்.

அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த மின்னஞ்சல் பிரபல்யமாகியது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த செய்தியை வெளியிட்ட அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் கடந்த 20ம் திகதி இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைப்பேசியில் அழைத்துள்ளார். இதன்போது ஜனாதிபதி, அந்த இணைப்பு செயலாளர் யார்? இது எப்போது இடம்பெற்றது? என வினவியுள்ள போதிலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதி ஊடகபிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறான சம்பவத்திற்கும் தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த செய்தி தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸ் மற்றும் அரசாங்கம் தற்போது வரையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த செய்தி போலியான செய்தி என்றால் அதனை சரிப்படுத்துவதற்காக தலையீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் திஸாநாயக்க என்பவர் சிவில் பொறியியலாளர். அவர் அவுஸ்திரேலியாவில் SMEC என்ற நிறுவனத்தில் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து இது வரை (8 வருடமும் 7 மாதங்களும்) அவர் செயற்பட்டுள்ளார்.

அவர் மொரட்டுவ பல்கலைகழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகின்றது.