ஜனாதிபதி மைத்திரி ஸ்ரீ.சு.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(12) இரவு 8.00 மணிக்கு சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த சந்திப்பின் போது 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் எனவும், அடுத்த வாரம் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் அண்மைக்கால அரசியல் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)