ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை தொடருவதில்லை என நீதிமன்றம் தீர்மானம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.