ஜனாதிபதி – விக்கி விசேட சந்திப்பு நாளை மறுதினம்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான விஷேட சந்திப்பு எதிர்வரும் 28ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் இராணுவத்திடம் உள்ள இடங்களை மீள வழங்குதல் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல் கடந்த 18ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பிற்போடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.