‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ ஜனாதிபதி தலைமையில் இன்று..

விளையாட்டு துறையில் ஆக உயரிய விருதான ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகரவின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த இந்த விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

விளையாட்டு வைபவத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 50க்கும் மேற்பட்டோருக்கு இந்த விழாவில் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படவுள்ளது.

கடந்த வருடத்திலும் , இவ்வருடத்திலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்காக திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்காக வாழ்க்கையில் ஒருமுறை வழங்கப்படும் ஜனாதிபதி கௌரவ விருதும் இதில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)