(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடியாக அறித்துள்ளார்.
அலரி மாளிகையில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றிப் பெறும் கொள்கைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.