ஜப்பானில் பாலியல் அடிமைகளாக தென் கொரிய பெண்கள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தமை தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக மனக்கசப்பு நிலவிவருகிறது.
கொரிய மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் கூடாரங்களில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர்.சுமார் 200,000 இலட்சம் பெண்கள் வரை இவ்வாறு பாலியல் அடிமைகளாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலர் தென் கொரியப் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இப்பெண்களிடம் ஜப்பான் மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் , அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படவேண்டுமெனவும் தென் கொரியா கோரி வருகின்றது.
எனினும் இவ்விடயம் தொடர்பாக பல்வேறு முரண்பாடான தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. அதாவது ஜப்பான் இவ்விடய த்தில் ஏற்கனவே மன்னிப்புக் கோரிவிட்ட தாகவும் , மேலும் நட்ட ஈடும் வழங்கி விட்ட தாகவும் ,இது பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல் , குறித்த பெண்கள் அக்காலத்தில் வழங்கப்பட்ட அதிக ஊதியத்துக்கு ஆசைப்பட்டே பாலியல் அடிமைகளாக இருந்ததாக வேறு சில தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புயுமோ கிஷிடாவுக்கு, ஜப்பானியப் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இச்சர்ச்சை தொடர்பில் 831,877 டொலர் செலவிலான கூட்டு நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கிஷிடா இன்று தென் கொரியா செல்கிறார், மேலும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பில், முன்னர் ஜப்பான் கோரியிருந்த மன்னிப்புவெளிப்படையாக இல்லை மற்றும் முன்னர் வழங்கப்பட்ட நட்ட ஈட்டுத் தொகை போதிய அளவில் இல்லை என தென் கொரியா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 மில்லியன் யென்களை ஜப்பான் தர இணங்கியுள்ள போதும் , தென்கொரியா சுமார் 1 பில்லியன் யென்களை கோருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது இடம்பெறவுள்ளபேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.