ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) 3 நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று(28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பான் நிதியுதவியின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கடல் ரோந்து சேவைக்காக 2 படகுகளையும், கஸுயுகி நகானே இந்த விஜயத்தின்போது அன்பளிப்பு செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.